Address: Orathuppalayam Dam, Orathupalayam, Tamil Nadu 638751
Attraction Location
Orathuppalayam Dam Videos
Orathupalayam Dam Tiruppur Dist
Orathupalayam Dam. One of famous dam in Kongu region it is called as Noyyal River. Now it is terrible to see because of Tiruppur Dyeing factory releases of dying water
Orathupalayam Dam - Triuppur Dying factory untreated Water
Tiruppur Dist
Orathupalayam Dam Pollution ஒரத்துப்பாளையம் அணை நொய்யல் - Save Noyyal River
ஒரத்துப்பாளையம் என்னும் கானல்நீர்த் தேக்கம் !!! ஆயிரம் ஏக்கர் அணைக்கட்டு வெறும் வெற்றிடமாகவே ...! மேற்குதொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகி கொடுமுடியில் பவானி நதியில் சங்கமிக்கும் நொய்யல் நதியின் குறுக்கே 1992 ஆண்டின் பண மதிப்பின் படி சுமார் INR.16,46,00,000/- கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசால் கட்டிமுடிக்கப்பட்ட இந்த 20அடி நீர்த்தேக்க அணையின் நீளம் 3 கி.மீ. கடல் மட்டத்தில் இருந்து 250மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது ஒரத்துப்பாளையம் அணை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பொழிகின்ற மழைப்பொழிவுகளை சேமிக்கும் பொருட்டு கட்டப்பட்டுள்ளது.சமீபத்தில் தென்மாவட்டங்களில் சராசரியான அளவினைக் கடந்து கூடுதலான மழைப்பொழிந்ததாக செய்திகள் கூறப்பட்டாலும் அணையில் ஒரு அடிகூட நீர் நிற்காமல் வறண்டுபோய் காட்சியளிக்கிறது. இயற்கை அன்னை கருணை பொழியும் மழை நீரினை கூட தேக்கிவைக்க கூட இயலாமல் வீணாய் கடலில் கலந்து விட்டது.
திருப்பூர் தொழில்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்தீகரிப்பு செய்யப்படாத சாய நீர் நேரடியாய நொய்யல் ஆற்றில் நிறுவனங்கள் கண்மூடித்தனமாக விடுவதால், நிலத்தடி நீர் மாசடைவது மட்டுமில்லாமல், சுற்றுவட்டார பகுதிகளில் வாழும் சாமானிய மக்கள்களுக்கு உடல் பாகங்கள் செயலிழப்பு, பற்களில் அறிப்பு, சுவாசக்கோளாறுகள், தோல்நோய்... போன்ற பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். மாசுபட்ட நீரில் கரும்பு, பருத்தி, வாழை, தென்னை, சோளம் முதலிய பயிர்கள் வளர மறுக்கும் அளவுக்கு மண்ணில் நச்சுத்திரவங்கள் கலங்கி விவசாயம் செய்ய வழியில்லாமல் 10,000+ Acre ஏக்கர் பாசன வசதி பெற்று வந்த விவசாய நிலங்கள் மனித உயிர்கள் வாழ தகுதியற்ற வறண்ட நிலமாக காட்சி தருகிறது. நீர்ப் பறவைகளைத் தேடி காஞ்சிமாநதி என்னும் கானல்நீர் அணையில் ஒப்பாரி பாடி. India's Most Polluted River Noyyal Bubbles With Toxic Foam. “River Noyyal is choking to death in Coimbatore. #நொய்யல்_கரையோரம்_என்_பயணங்கள். . .