Dindigul Sripuram Temple Kumbabishekam Interview Selva Ganesh
Dindigul Sripuram Temple Kumbabishekam Interview Selva Ganesh
Dindigul Sripuram Temple Kumbabishekam
திண்டுக்கல் மாவட்டம் ஶ்ரீபுரத்தில் உள்ள ஶ்ரீகிருஷ்ணர், ஶ்ரீமுத்தையன், அருள்மிகு அங்காளம்மன், ஶ்ரீமதுர காளி, ஶ்ரீமதுரைவீரன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் இன்று (31.08.17) நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமம் அருகே உள்ள ஶ்ரீபுரத்தில் ஶ்ரீகிருஷ்ணர், ஶ்ரீமுத்தையன், அருள்மிகு அங்காளம்மன், ஶ்ரீமதுர காளி, ஶ்ரீமதுரைவீரன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் இன்று (31.08.17) நடைபெற்றது.
முன்னதாக நேற்று மாலை தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. பின்னர் நிலத்தேவர் வேள்வி வழிப்பாடு, பிரவேசப்பலி, மிருத்சிங்கரணம், அங்குதார்ப்பணம், (ரக்ஷாபந்தனம்), கும்ப அலங்காரம் , கலாகர்சணம் , யாக வேள்வி துவங்கியது. கனி மூலிகை வேள்வி, மஹா பூர்ணாகுதி , பேரொளி வழிப்பாடு ,மஹா தீபாராதனை நடைபெற்றது.பின்னர் ஶ்ரீகிருஷ்ணர் , ஶ்ரீமுத்தையன் , அருள்மிகு அங்காளம்மன் , ஶ்ரீமதுர காளி , ஶ்ரீமதுரைவீரன் ஆகிய கோவில்களுக்கு நிலை நிறுத்தல் , எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று (31.08.17) நடைபெற்ற 2-ம் யாக வேள்விக்கு பிறகு புனித தீர்த்தங்கள் அடங்கிய கடம புறப்பாடும் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் தேவரின் திருமேனிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு மலர்களால் போற்றி வழிப்பாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பாக புனித நீர் தெளித்தலும், அன்னதானமும் நடைபெற்றது.
பேட்டி : கார்த்திகேயன் (தலைமை அர்ச்சகர் ), பிரச்சன்னா (அர்ச்சகர் ), செல்வ கணேஷ் ( கோவில் ஒருங்கிணைப்பாளர்).
This Video Covered From Coimbatore District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or